பாய்ஸ் செலிபிரேட் Valentines day : ஆனா, லெஜண்ட்ஸ் செலிபிரேட்…? : நித்தியின் காதலர் தின குறும்பு வீடியோ..!

14 February 2020, 2:52 pm
nithyananda new - updatenews360
Quick Share

பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பவர் சர்ச்சை சாமியார் நித்யானந்தா. இவர், தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது புகழை தினமும் சமூக வலைதளங்கள் மூலமாக நாட்டு மக்கள் அறிந்த வண்ணம் உள்ளனர். அவர் கைலாசா என்னும் நாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில், கரீபியன் தீவில் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவ்வப்போது, யாரையாவது நக்கலடித்து, வம்புக்கு இழுப்பது நித்யானந்தாவின் வாடிக்கை. என்னதான், அவர் மீது பாலியல் வன்கொடுமை, கடத்தல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவரது பேச்சை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் தற்போதும் இருக்கத்தான் செய்கிறது.

இந்த நிலையில், நித்யானந்தா லீலைகளின் வீடியோ அடுத்தடுத்து வெளியே வந்தாலும், அவர் ஒரு முற்றும் துறந்து சாமியார் என்பதை யாரும் மறக்கமாட்டார். அப்படி பட்ட சாமியார், தற்போது காதலர் தினம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பழைய வீடியோவாக இருந்தாலும், இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு காதலர் தினத்தைப் பற்றியது தான்.

அந்த வீடியோவில், எல்லாப் பக்கத்துலயும் ரோஜாப் பூவை வீசியெறிங்க… எந்தப் பக்கத்துல இருந்து சிக்னல் கிடைக்கிதோ, அத பிக்கப் பண்ணிக்கோங்க… இந்த நிலைதான் இன்றைய Valentines day… அவரது பேச்சைக் கேட்டு, அங்கிருந்த பக்தாள் எல்லோரும் கைகொட்டி சிரித்து ரசிக்கின்றனர்.

மேலும், காதலர் தினத்தை பசங்கதான் கொண்டாடுவாங்க… ஆனா, லெஜண்ட்ஸ்ங்க சிவராத்திரியை மட்டும்தா கொண்டாடுவாங்கன்னு, அடுத்ததாக சொல்லி இருக்காறு.இதைக் கேட்டு அனைவரும் கரகோஷத்தை எழுப்பி சிரிக்கின்றனர்.

அவரது இந்தப் பேச்சு, என்ன அர்த்தம், யாரை கிண்டலடிக்கிறார் என்பது யாருக்கும் விளங்கவில்லை. ஆனால், இந்த காதலர் தினத்திற்கு தலைவருடைய தரிசனம் கிடைத்ததே என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply