அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு : 12 காளைகளை அடக்கிய கண்ணனுக்கு கார் பரிசு…!!

16 January 2021, 5:52 pm
alanganallur jallukattu - updatenews360
Quick Share

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கிய கண்ணன் என்பவருக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்டவற்றை தொடர்ந்து, பொங்கல் பண்டிகையின் 3வது நாளான இன்று உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.30 மணிக்கு தொடங்கியது. கோட்டை முனியசாமி வாடிவாசலில் இந்தப் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

8 சுற்றுகளாக நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்க 700 வீரர்களும், 720க்கும் மேற்பட்ட காளைகளும் களமிறக்கப்பட்டன. வெற்றி பெற்ற காளை மற்றும் காளையர்களுக்கு கார், தங்கக்காசு, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இதில் அதிகபட்சமாக 12 காளைகளை அடக்கிய விராட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கண்ணனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சார்பில் முதல் பரிசாக கார் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 9 காளைகளை அடக்கி 2வது இடத்தை பிடித்த அரிட்டாபட்டியைச் சேர்ந்த கருப்பணனுக்கு மோட்டார் சைக்கிளும், 8 காளைகளை அடக்கிய சக்திக்கு ஒரு சவரன் தங்கக் காசுவும் வழங்கப்பட்டது. சிறந்த மாட்டிற்கான பரிசு குருவித்துறையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0