மதுரை TO துபாய் இடையே மீண்டும் விமான சேவை: அக்.1 முதல் இயக்க திட்டம்..!!

Author: Aarthi Sivakumar
20 September 2021, 9:54 am
Quick Share

மதுரை: அக்டோபர் 1ம் தேதி முதல் மதுரை – துபாய் விமான சேவை தொடங்க இருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை தடை செய்யப்பட்டது. இந்நிலையில், மதுரையில் இருந்து துபாய்க்கு ஒப்பந்தப்படி அடுத்த மாதம் 1ம் தேதி முதல் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தொடங்க இருக்கிறது.

இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. வாரத்திற்கு 3 நாட்களுக்கு மதுரை – துபாய் மற்றும் துபாய் – மதுரை வழித்தடத்தில் விமான சேவையை தொடங்குகிறது. அதன்படி, துபாயில் இருந்து மதுரைக்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் அதிகாலை துபாய் நேரப்படி 3.35 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை இந்திய நேரப்படி 9.20 மணிக்கு வந்து சேரும்.

அதுபோல் மதுரையில் இருந்து துபாய்க்கு ஞாயிறு, புதன், வெள்ளி கிழமைகளில் காலை இந்திய நேரப்படி 11.50 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு மதியம் துபாய் நேரப்படி 2.35 மணிக்கு சென்றடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 210

0

0