2020-21ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரியா…? அப்போ நீங்க சரிபட்டு வரமாட்டீங்க… எச்டிஎப்சி வங்கியின் விளம்பரத்தால் சர்ச்சை..!!

Author: Babu
3 August 2021, 7:42 pm
cbse result - updatenews360
Quick Share

2020 -21ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் குறித்த விளம்பரத்தை வெளியிட்டு எச்டிஎப்சி வங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும், கடந்த ஆண்டில் இருந்து இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து, பிற ஆண்டு கல்லூரி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறுதியாண்டு கல்வி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 2020 -21ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் குறித்த விளம்பரத்தை வெளியிட்டு எச்டிஎப்சி வங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது, அந்த எச்டிஎப்சி வங்கி நிறுவனத்தின் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள கிளைகளின் பணியிடங்களுக்கான இன்டர்வ்யூவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதில், 2020-21 கல்வி ஆண்டில் தேர்வானவர்கள் வங்கியில் பணிபுரிய தகுதியில்லை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 199

0

0