மதுரையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை : சிம்கார்டுகள், ஹார்டுடிஸ்க்குகள் பறிமுதல்!!

16 May 2021, 7:42 pm
NIA_Uranium_Mahrastra_ATS_UpdateNews360
Quick Share

மதுரை : ஐஎஸ் அமைப்பிற்கு ஆதராவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட நிலையில், மதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், மத நல்லிணத்திற்கு எதிராகவும் மதுரையில் இருந்து சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மதுரையில் மஹபூப்பாளையம், பெத்தானியாபுரம், கே.புதூர் காஜிமார் தெரு ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அதிகாலை முதல் தொடர்ந்து 3 மணிநேரம் நடந்த இந்த சோதனையின் முடிவில் லேப்டாப், ஹார்டுடிஸ்க், பென்டிரைவ், செல்போன், சிம்கார்டுகள் உட்பட 16 பொருட்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் யாரும் கைது செய்யப்படவில்லை.

ஹார்டுடிஸ்க், பென்டிரைவ், செல்போன், சிம்கார்டுகளை ஆய்வு செய்த பிறகு தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 231

0

0