காதல் வலையை விரித்து சிறுமியை சீரழித்த காமுகன்.! உல்லாசமாக இருக்க ஊர் ஊராக சுற்றிய கொடுமை.!!

5 August 2020, 3:12 pm
Madurai Girl Abuse- Updatenews360
Quick Share

மதுரை : முகநூலில் பழகிய சிறுமியை காதல் வலையில் விழ வைத்து இபாஸ் இல்லாமல் பல்வேறு இடங்களுக்கு சுற்றி பாலியல் வன்முறை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவைச் சேர்ந்த முகமது சபின் என்ற 21 வயது இளைஞர் ஃபேஸ்புக் மூலம் பேசி நண்பராக அறிமுகமாகியுள்ளார்.

நாளடைவில் அந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி மயக்கியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தனிமையில் இருவரும் சந்தித்துள்ளனர். நீ அழகா இருக்க, உன்னை விட அழகு யாரும் இல்லை என சினிமா பட வசனங்களை அள்ளித் தெளிக்க, அதில் சிறுமி மயங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஒரு வருடமாக பேசிய இவர்களுடைய நட்பானது காதலாக மாறியுள்ளது, இந்த நிலையில் கடந்த 31ம் தேதி மதுரைக்கு வந்த முகமது சபின் சிறுமியை தன்னுடன் வரும்படி கட்டாயப்படுத்தி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

இ-பாஸ் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இளைஞர் அழைத்து சென்றுள்ளான். ஒரு கண்ணில் காதல் நாடகம் மறு கண்ணில் காமமும் அரங்கேறிய இளைஞனுக்கு சந்து புந்து தெரியாதா என்ன? இரவு வீட்டில் கொண்டுவந்து விடுகிறேன் என கூறிய, முகநூல் காதல் மன்னன், சிறுமியை பொள்ளாச்சி,பழனி என பல இடங்களுக்கு சென்று ஊர் சுற்றிய நிலையில் இறுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளான்.

சிறுமியை காணவில்லை என காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து சிறுமியின் தொலைபேசி எண்ணை வைத்து ஆராய்ந்த போலீசார், சிக்னல் பொள்ளாச்சி, பழனி, என காட்டி இறுதியாக திண்டுக்கல்லில் சிக்னல் காட்டியது.

திண்டுக்கல்லுக்கு விரைந்த போலீசார், சிறுமி தங்கியருந்த சுகன்யா லாட்ஜில் சென்று விசாரித்தனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் இளைஞர் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளது தெரியவந்தது.

மேலும் இந்த காதல் மன்னன் பல பெண்களை இப்படித்தான் காதல் வலையில் விழ வைத்து அடிக்கடி இதே லாட்ஜில் அறை எடுத்து லீலைகளை நிகழ்த்தியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஊரடங்கு நேரத்தில் விடுதி செயல்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக முகநூல் காதல் மன்னனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளி இல்லாததால் மாணவ மாணவிகள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள எத்தனையோ வழிகள் இருந்தும், செல்போனில் மூழ்கி முகம் தெரியாத நபருடன் முகநூல் மூலமாக பழகினால் எந்த மாதிரியான சம்பவம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணமாகியுள்ளது.

Views: - 11

0

0