தண்டவாளத்தில் விழுந்த குழந்தை… உயிரைப் பணயம் வைத்த ரயில்வே ஊழியர்… திக் திக் சம்பவம்..!!!

19 April 2021, 11:45 am
train - updatenews360
Quick Share

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா அருகே ரயில் வரும் போது தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை, தனது உயிரைப் பணயம் வைத்து ரயில்வே ஊழியர் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மண்டலத்திற்குட்பட்ட வாங்கனி ரயில்நிலையத்தின் நடைமேடையில் சிறுவன் ஒருவன் தனது தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, நடைமேடையின் ஓரத்திற்கு சென்ற சிறுவன், திடீரென கால் தவி ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தான். அப்போது, அதிவிரைவு ரயில் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், செய்வதறியாது நடைமேடையில் அமர்ந்து, மகனை பார்த்து அழுது கொண்டிருக்கிறார்.

ஆனால், கடவுள் போல அங்கே இருந்த ரயில்வே ஊழியர், ரயில் வருவதற்கு எதிர்புறமாக ஓடிச் சென்று, சிறுவனை நடைமேடையில் தூக்கி விட்டதுடன், நூலிழையில் தனது உயிரையும் காப்பற்றிக் கொண்டார்.

மிக மோசமான சமயத்தில், சாமர்த்தியமாக செயல்பட்டு, தனது உயிரையும் பணயம் வைத்து சிறுவனின் உயிரைக் காப்பாற்றி ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவின் தீரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Views: - 74

0

0