திமுகவில் மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு : அந்த மேயர் பதவி…? அதிர்ச்சியில் கோவை மாவட்ட திமுக..!!

Author: Babu Lakshmanan
7 August 2021, 4:13 pm
mahendran - stalin - updatenews360
Quick Share

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு அக்கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை கடந்தது. கோவை தெற்கு தொகுதியில் மட்டும் கமல்ஹாசன் சொற்ப வாக்குகளில் தோல்வியை தழுவினார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் தோல்வியின் எதிரொலியால் அக்கட்சியில் இருந்து மகேந்திரன் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர். கமல்ஹாசனின் கொள்கையில் மாற்றம் இல்லாததுதான் விலகியதற்கு காரணம் என அக்கட்சியின் துணைத்தலைவராக இருந்த மகேந்திரன் வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

Mahendran Stalin - Updatenews360

கோவையில் திமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில், திமுகவை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் உள்ளார். எனவே, கோவையில் மக்களுக்கு பரீட்சையமான முகமாக இருக்கும் மகேந்திரன் தன்னை தேடி வந்தது திமுகவுக்கு நல்ல பலனை கொடுக்கும் என்று மனக்கணக்கும் போட்டுள்ளார்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஆர். மகேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக தலைமையின் இந்த முடிவு கோவை மாவட்ட திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், சிங்காநல்லூர் தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்தவரே மகேந்திரன்தான், அவரை கட்சியில் இணைத்ததே பெரிய விஷயம், பொறுப்பு எல்லாம் கொடுப்பதா..? என்று புலம்பி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இத்தனை நாட்கள் திமுகவிற்கு உழைத்த முக்கிய நிர்வாகிகளை ஓரம் கட்டி விட்டு, கோவை மேயர் பதவிக்கு மகேந்திரன் பெயர் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவலால் கோவை திமுக நிர்வாகிகள் கடுப்பில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல், திமுகவில் இணைந்த மறுதினமே கோவை மாவட்டத்தில் போஸ்டர்களை ஒட்டி மகேந்திரன் விளம்பரத்திக் கொண்டதும் கூட திமுகவினருக்கு சற்று மனக்கசப்பாகத்தான் இருந்ததாக சொல்லப்படுகிறது.

சரி, ஆனது ஆகட்டும். இனி சில நாட்களில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக ஒரே அணியாக தேர்தலை சந்திப்பார்களா..? இல்லை கோஷ்டிகளாக பிரிந்து தேர்தலை எதிர்கொள்வார்களா..? என்பது தெரிய வரும்.

Views: - 379

0

0