குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000.. திமுக இன்னமும் பிடிகொடுக்காததை ஏற்க முடியாது : மக்கள் நீதி மய்யம்

Author: Babu Lakshmanan
23 August 2022, 2:03 pm
Kamal Torch Light -Updatenews360
Quick Share

சென்னை : குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை நிதியுதவி திட்டத்திற்கு திமுக இன்னமும் பிடிகொடுக்காதது ஏற்க முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை புதுச்சேரி சட்டசபையில் அம்மாநில முதலமைச்சரும், நிதியமைச்சருமான ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். புதுச்சேரி பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், 21 முதல் 57 வயது வரையிலான வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அம்மாநில மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத இந்த அறிவிப்பையே புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த திமுகவுக்கு நெருக்கடி ஏற்படத் தொடங்கி விட்டது.

இதன் ஒரு பகுதியாக, குடும்ப தலைவிகளுக்கு மாதாந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அளித்த திமுக, இன்னமும் பிடிகொடுக்காமல் உள்ளது ஏற்புடையதல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஊதியம் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென நாட்டிலேயே முதன்முதலில் குரல் கொடுத்தவர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன். இந்த திட்டத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்பதுடன், புதுச்சேரி அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி: திமுக இன்னும் பிடிகொடுக்காமல் உள்ளது ஏற்புடையதல்ல – மக்கள் நீதி மய்யம் அதேசமயம், இந்த திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அளித்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திமுக, இன்னமும் பிடிகொடுக்காமல் உள்ளது ஏற்புடையதல்ல. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 150

0

0