கையில் செங்கலுடன் காய்கறி கடைகள் முன்பு நின்ற மமதா…! எதுக்குன்னு பாருங்க…?

26 March 2020, 6:17 pm
Quick Share

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சமூக தனிமைப்படுத்தலை வலியுறுத்தி சாலையில் வட்டம் வரைந்து அனைவரையும் அசத்தினார் முதலமைச்சர் மமதா பானர்ஜி.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்கள் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவுமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

மேற்கு வங்க தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ உதவி போன்ற அடிப்படை வசதிகளை வழங்க உதவ வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் 18 மாநில முதலமைச்சர்களுக்கு அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கொல்கத்தாவில் காய்கறி சந்தைகள், சாலையோர காய்கறி கடைகளில் தனிமைப்படுத்துதல் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு நடத்த அதிகாரிகளுடன் மமதா சென்றார்.


Courtesy: ANI

காரில் இருந்து இறங்கிய அவர், அங்குள்ள காய்கறி கடைக்காரர்களிடம் பேசினார். ஒரு கட்டத்தில் அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்த அவர், பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று கொண்டே ஒவ்வொருவராக காய்கறிகளை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அங்கிருந்த ஒரு செங்கலை எடுத்து, இங்கே, இப்படி நிற்க வேண்டும் என்று வட்டம் போட்டு அனைவருக்கும் பாடம் எடுத்தார். அவரது இந்த செயலை விளக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply