கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியுடன் மம்தா பானர்ஜிக்கு திருமணம் : வைரலாகும் திருமண அழைப்பிதழ்…!!!

10 June 2021, 8:37 pm
Quick Share

திருமண அழைப்பிதழில் மணமக்களின் பெயர்களால் தான் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மணமகளின் பெயர் பி மம்தா பானர்ஜி எனவும், மணமகனின் பெயர் ஏஎம் சோஷியலிசம் எனவும் அச்சிடப்பட்டுள்ளது.

பெருகிவரும் தொழில்நட்பு வளர்ச்சியில் மக்கள் வித்தியாசமான எது செய்தாலும் அது வலைதளங்களில் வைரலாவது வழக்கம். இதில் அந்த வித்தியாசமான செயலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் தலைவர்கள் தொடர்பு இருந்தால் அவர்களின் ஆதரவாகள், அந்த செயலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிப்பது இன்றளவும் பரவலாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியின் திருமண அழைப்பிதழ் இணையத்தை கலக்கி வருகிறது. அந்த திருமண அழைப்பிதழ் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி மம்தா பானர்ஜி என்ற மணமளுக்கும் ஏ.எம் சோசலிசம் என்ற மணமகனுக்கும் ஜூன் 13 அன்று திருமணம் நடைபெற உள்ளதாக, அந்த அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது.

அந்த அழைப்பிதழின் புகைப்படம் வைரலாகிவிட்டது, திருமண அட்டை உண்மையானதா அல்லது போட்டோஷாப் செய்யப்பட்டதா என்று பலர் சந்தேகம் எழுப்பினர். இந்த அழைப்பு திங்களன்று வெளியிடப்பட்டு வைரலாகியதிலிருந்து, மணமகனின் தந்தை, ஏ மோகன் என பிரபலமாக அறியப்படும் லெனின் மோகனுக்கு, தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. தனது மகனின் திருமண அழைப்பிதழ் தான் உறுதிப்படுத்தினார். இவர் தமிழ்நாட்டின் (Tamilnadu) சேலத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாவட்ட செயலாளராக உள்ளார். “மணமகன் மற்றும் மணமகளின் பெயர்கள் ஏன் இப்படி உள்ளது என எல்லோரும் மிகவும் ஆர்வமாக கேட்டனர்.

அழைப்பிதழ் உண்மையானதா என்பதை அறிந்து கொள்ள, கட்சியின் சக உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து பலர் என்னை அழைத்தார்கள், எல்லோரும் ஒரே கேள்வியை கேட்பது மிகவும் எரிச்சலையும் கோபத்தையும் ஊட்டியது. ஆனால் பின்னர் அது பழக்கமாகிவிட்டது , ” என அவர் குறிப்பிட்டார். இது குறித்து மேலும் விளக்கிய மோகன் அவர்கள், கட்டூர் கிராமத்தில் பெரும்பான்மையான மக்கள் கம்யூனிசத்தைப் பின்பற்றுபவர்கள். ஏ.எம் சோசலிசம், கம்யூனிஸம், லெனினிசம், ரஷ்யா, மாஸ்கோ, செக்கோஸ்லோவாக்கியா, ருமேனியா, வியட்நாம், வென்மணி போன்ற பெயர்கள் பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படும் பெயர்கள் என்றார்.
திருமண அழைப்பிதழ் அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி, அமானி கொண்டலாம்பட்டி கிராமத்தில் உள்ள மணமகளின் வீட்டில் ஜூன் 13 அன்று திருமணம் நடைபெற உள்ளது.

Views: - 159

0

0