பிரதமர் வேட்பாளரா? வேண்டவே, வேண்டாம்!போட்டியிலிருந்து ஒதுங்கிய மம்தா : 2026 தேர்தலுக்கு இப்போதே P.K.விடம் சரண்டர்!!

16 June 2021, 3:11 pm
PK Mamta- Updatenews360
Quick Share

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூங்களை வகுத்து கொடுக்கும் ‘ஐ பேக்’ அமைப்பின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இதுவரை, ஒரு நாடாளுமன்றத் தேர்தலுக்கும், 7 சட்டப் பேரவை தேர்தல்களுக்கும் பிரதான கட்சிகளின் அரசியல் ஆலோசகராக இருந்துள்ளார்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் அவர் பணிபுரிந்த சிஏஜி, பாஜகவில் மோடியை முன்னிறுத்தி உத்திகளை வகுத்துத் தந்தது. அந்தத் தேர்தலில் பாஜக முதல் முறையாக தனிப்பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது.

is-prashant-kishor-back-on-team-modi - India News

இதையடுத்து மறு ஆண்டே ஐபேக் அமைப்பை தனிப்பட்டமுறையில் பிரசாந்த் கிஷோர் தொடங்கினார். 2015-ல் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணிக்கு ஐபேக் வகுத்துக் கொடுத்த வியூகங்கள் அபார வெற்றியை ஈட்டித் தந்தது. அதன் பிறகு 2017-ல் நிதிஷ்குமார் பாஜகவுடன் இணைந்து ஆட்சியை நடத்தி வந்தது தனிக்கதை.

2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரசுக்கு ஆதரவாக ஐபேக் செயல்பட்டது. இதில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் படுதோல்வி கண்டது. அக்கட்சிக்கு அந்த தேர்தலில் வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக வென்றெடுத்தது.

PK became the chief advisor to CM Amarinder Singh - Buziness Bytes

அதேசமயம் பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனால்தான் 2022-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், பிரசாந்த் கிஷோரின் ஐபேக்குடன் அமரீந்தர் சிங் மீண்டும் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்.

2019-ல் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒஎஸ்ஆர் காங்கிரசுக்காக பிரசாந்த் கிஷோர் பணிபுரிந்தார். அதில் ஜெகன் மோகன் அபார வெற்றி கண்டார்.

Kingmaker' Kishor Best in Business: Twitter After Jagan's Big Win

இதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு அரசியல் ஆலோசகராக அவர் செயல்பட்டார். அந்தத் தேர்தலில் டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62-ஐ ஆம் ஆத்மி கைப்பற்றியது.

Why 'winners' pick Prashant Kishor

அதே ஆண்டின் இறுதியில், பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே தனியாக அரசியல் இயக்கம் தொடங்கி முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளதையும், பாஜகவையும் வீழ்த்திக் காட்டுவேன் என்று சபதம் எடுத்தார், பிரசாந்த் கிஷோர்.

ஆனால் அவர் அரசியல் இயக்கமும் காணவில்லை, தேர்தலிலும் போட்டியிடவும் இல்லை. என்றபோதிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கு அவர் மறைமுகமாக வியூகங்களை வகுத்து கொடுத்ததாக கூறப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி கடும் போட்டியை எதிர் கொண்டு வெற்றி கண்டது.

இந்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும், தமிழகத்தில் திமுகவுக்கும் ஐபேக் அரசியல் உத்திகளை வகுத்துக் கொடுத்தது.
முன்னதாக தமிழகத்தில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்குத்தான் அரசியல் ஆலோசகராக செயல்பட பிரசாந்த் கிஷோரின் ஐபேக் வாய்மொழியாக ஒப்புக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் கடைசியில் திமுகவின் பக்கம் தாவி விட்டது.

PM Modi, Mamata equally popular' in Bengal: Prashant Kishor in purported  audio clip released by BJP - The Economic Times

மேற்குவங்காளத்தில் 200 மேற்பட்ட தொகுதிகளில், மம்தா பானர்ஜியின் கட்சி வெற்றிபெறும், பாஜகவுக்கு இரட்டை இலக்கங்களுக்கு மேல் கிடைக்காது என்றும் தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணி 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் ஐபேக் கணித்து இருந்தது. மேற்கு வங்காளத்தில் அது அப்படியே பலித்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போதிலும் அதிமுக கூட்டணி ஐபேக் கணித்ததை விட அதிக இடங்களையே கைப்பற்றியது.

இந்த நிலையில்தான், “பல ஆண்டுகளாக கட்சிகளுக்கு தொடர்ந்து வியூகங்களை வகுத்துக் கொடுத்து எனக்கு சலித்துப் போய்விட்டது. அதனால் சில காலம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன். எனினும் நான் பார்த்த பணிகளை எனது ஐபேக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் இனி கவனித்துக் கொள்வார்கள்” என்று சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார்.

இப்படி சொல்லி இருந்தாலும் கூட சமீபகாலமாக அவர் வேறொரு திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பாக எதிர்க் கட்சிகள் அனைத்தையும் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். அதை நினைவூட்டும் விதமாகத்தான் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல், காங்கிரசுக்கு அரசியல் உத்திகளை வகுத்துக் கொடுக்க ஒரு அமைப்பின் உதவி தேவை என்று, சோனியாவுக்கு அண்மையில் எழுதிய ஒரு கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த இரண்டையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்திப் பார்த்தால், பிரசாந்த் கிஷோர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரசுக்கு உத்திகளை வகுத்துக் கொடுப்பார் என்பதை யூகிக்க முடிகிறது.

Mamta's Senior Leader Of TMC Not Happy With 'PK'? Unable To Digest I-PAC -  Jsnewstimes

சிறிது காலம் ஓய்வு எடுப்பேன் என்று அவர் அறிவித்த பின்பு, நேரடியாக அரசியல் களத்துக்கு வர முடியாது என்பதால், திரையின் பின்னால் இருந்தவாறு ஐபேக் தலைமை நிர்வாகிகளை அவர் இயக்க தொடங்கியிருக்கிறார், என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த நிலையில்தான், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் உதவியை மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் நாடியதுடன் ஒப்பந்தத்தை 2026-ம் ஆண்டுவரை நீட்டித்தும் இருக்கிறார்.

Nitish Kumar shows Prashant Kishor, Pavan Varma the door | Deccan Herald

அதேநேரம், ஐபேக் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகிகளைக் கொண்ட 9 பேர் குழுதான் 2026 தேர்தலுக்காக மம்தா பானர்ஜிக்கு வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மம்தா பானர்ஜியின் இந்த திடீர் முடிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

இதுபற்றி டெல்லி அரசியல் செய்தியாளர்கள் சிலர் கூறும்போது,” 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை எதிர்க் கட்சிகளின் சார்பாக நிறுத்துவதற்கு பிரசாந்த் கிஷோர் முதலில் விரும்பினார். மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் எதிர்க்க அவர் தான் பொருத்தமானவர் என்றும் கருதினார். ஆனால் எதிர்க்கட்சிகள் வலுவில்லாத நிலையில் மோடியுடன் மோத நேர்ந்து தோல்வி கண்டு விட்டால் அதனால் பெருத்த அவமானம்தான் ஏற்படும். மாநில அரசியலிலும் அது தனக்கு பெரும் பாதிப்பை உருவாக்கும் என்று கருதித்தான் பிரதமர் வேட்பாளராக என்னை முன் நிறுத்த வேண்டாம் என்பதை பிரசாந்த் கிஷோருக்கு மறைமுகமாக உணர்த்தும்விதமாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஐபேக்குடன் மம்தா பானர்ஜி
இப்போதே ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்.

Political strategist Prashant Kishor may work for Mamata Banerjee: Sources  | India News - Times of India

மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிந்து முழுமையாக இன்னும் 3 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அடுத்த தேர்தலுக்கு ஒப்பந்தம் போடுகிறார் என்றால் எனக்கு தேசிய அரசியலே வேண்டாம், ஆளை விடுங்கள் என்றுதானே அர்த்தம். தவிர தேசிய அரசியலுக்கு வந்து விட்டால் இப்போதுபோல பிரதமர் மோடியை மிரட்டும் பாணியில் அதிகார தோரணையுடன் கேள்வி கேட்கவும் முடியாது. தொடர்ந்து மத்திய பாஜக அரசுடன் மோதல் போக்கையும் கடைபிடிக்க முடியாது.

மேலும் பிரச்சாரத்திற்காக மாநிலம் மாநிலமாக அலைய வேண்டியதிருக்கும். அது உடல் நலத்துக்கு சரி வராது என்பதும் அவருக்கு தெரியும். அதனால்தான் தேசிய அரசியலே வேண்டாம் என்று மம்தா பானர்ஜி பெரிதாக ஒரு கும்பிடு போட்டு ஒதுங்கிக் கொண்டு விட்டார்” என்று அவர்கள் உண்மையை உடைத்தனர்.

Views: - 210

0

0