மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்…!!
23 February 2021, 3:50 pmபுதுடெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 4 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர்களை நியமினம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகத்திற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி. மருத்துவ கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
இதே போல் ஜம்மு காஷ்மீரில் உள்ள விஜய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனை, இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றுக்கும் புதிய நிர்வாக இயக்குனர்களை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
0
0