முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு டிச.,2ம் தேதி கல்லூரி திறப்பு : தமிழக அரசு அறிவிப்பு

12 November 2020, 10:54 am
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : ஆராய்ச்சி மற்றும் முதுநிலை இறுதியாண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. 16ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெற்றோர்கள் கருத்து கேட்பில், பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என பெரும்பாலான பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை என்றும், சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு இன்று அறிவித்தது. இந்த நிலையில், அனைத்து ஆராய்ச்சி மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் 2 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Views: - 25

0

0