மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாள் – துணைமுதலமைச்சர் ட்வீட்..!!

By: Aarthi
16 October 2020, 8:36 am
OPS- Updatenews360
Quick Share

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாளில் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வியாபார நோக்கிலே இந்தியாவிற்குள் காலூன்றி நம்மை ஆள நினைத்த வெள்ளையர்களை வீரத்துடன் எதிர்கொண்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுநாள் இன்று.

இந்நிலையில், துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில்,

ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக வீரமுழக்கமிட்டு, உயிரை துச்சமெனத் தியாகம் செய்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம் என பதிவிட்டுள்ளார்.

Views: - 42

0

0