சுருக்குவலைக்கு தடை : தமிழக மீன்வளத்துறையை கண்டித்து 3 மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

17 July 2021, 12:07 pm
fishers strike - updatenews360
Quick Share

மயிலாடுதுறை : சந்திரபாடி மீனவ கிராமத்தில் சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க கோரி மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி மீனவ கிராமத்தில் சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்துவரும் சுருக்குவலையை தடை செய்யக்கூடாது, தடை செய்ய நினைக்கும் தமிழக மீன்வளத்துறையையும், மீன்வளத்துறை அதிகாரிகளையும் கண்டித்து இன்று அனைத்து ஒருங்கிணைந்த சுருக்குவலை மீனவ கிராமங்கள் சார்பில் மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது தங்களின் வாழ்வாதாரமான சுருக்குவலை தொழிலையும், அதனை சார்ந்த தொழிலாளர்களையும் நசுக்க நினைப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983ன்படி அனைத்து வகையான மீன்பிடி தொழிலையும் முறைபடுத்த வேண்டும் என்றும் சந்திரபாடியில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறையைப் போலவே, நாகை மற்றும் கடலூர் மாவட்ட மீனவர்களும் சுருக்கு வலைக்கு அனுமதி கோரி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 115

0

0

Leave a Reply