எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

3 November 2020, 1:09 pm
counciling- updatenews360
Quick Share

சென்னை : மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்இடஒதுக்கீடு வழங்கவதற்கான மசோதாவை தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆளுநரின் ஒப்புதல் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதா பற்றி முடிவெடுக்க 4 வார கால அவகாசம் தேவை என ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இதனால், ஆளுநர் முடிவெடுக்கும் வரையில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்படாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு 7.5 % சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்கி அரசாணை பிறப்பித்ததைதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, மருத்துவ கலந்தாய்வு எப்போது நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் 12ஆம் தேதி வரை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் 16-ம் தேதி வெளியிடப்படும் என்பதால், கலந்தாய்வு நவம்பர் 18-ம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிகிறது.

Views: - 19

0

0