மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு நடப்பாண்டில் சாத்தியமில்லை : மத்திய அரசு

15 October 2020, 4:49 pm
Supreme_Court_UpdateNews360
Quick Share

மருத்துவப்படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு, நடப்பாண்டில் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கிறஞர், மருத்துவப்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு, நடப்பாண்டில் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், இந்த ஒதுக்கீட்டை வழங்கும் விவகாரத்தில் இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இடஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் மத்திய அரசு கூறியது. அரசின் இந்த விளக்கம் மனுதாரர்களான தமிழக அரசியல் கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே, மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வர மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0