ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கு : இன்று தீர்ப்பை அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்
26 October 2020, 11:12 amமருத்துவப்படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது.
அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன. வழக்கை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின்னர், மருத்துவப்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையில்லை என்று பரபரப்பான தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
மேலும், மருத்துவப்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு, நடப்பாண்டில் வழங்க முடியாது என திட்டவட்டமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஒதுக்கீட்டை வழங்கும் விவகாரத்தில் இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், இடஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.
இந்த நிலையில், மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவிக்கிறது.
0
0