மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் இருப்பிட சான்றிதழை கண்காணிக்க குழு அமைப்பு

19 November 2020, 12:28 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : மருத்துவ படிப்பு சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் இருப்பிட சான்றிதழை கண்காணிக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக, வெளியிடப்பட்டிருந்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியலில், பிற மாநில தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள், தமிழக தரவரிசைப் பட்டியலிலும் இடம்பற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவர் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழ்நாடு மற்றும் கேரள மாநில கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து 2 தரவரிசை பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால், ஒரு மாணவர், இரு மாநிலங்களில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிப்பதில் தவறு ஏதும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். அதேவேளையில், இரண்டு மாநிலங்களிலும் அந்தந்த மாநில இருப்பிடச் சான்றிதழை வழங்கினால்தான் தவறு என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, ரேங்க் பட்டியலில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வலுத்தது.

இந்த நிலையில், மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் இருப்பிட சான்றிதழை கண்காணிக்க குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 34 மாணவர்களின் பெயர் தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ரேங்க் பட்டியலில் இடம்பெற்று முறைகேடு அம்பலமான நிலையில் 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைத்து.

Views: - 24

0

0