மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு : ஆக.,25ம் தேதி வெளியாகும் முக்கிய தீர்ப்பு
Author: Babu Lakshmanan18 August 2021, 4:59 pm
சென்னை : மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை வழங்கக் கோரிய வழக்கில் ஆக.,25ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரியது தொடர்பாக திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்ட நிலையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான ஒதுக்கீட்டால் ஓபிசி பிரிவுக்கு பாதிப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் ஆகஸ்ட் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
0
0