மேகதாது அணை விவகாரம் : தமிழகம் உள்பட 4 மாநில முதலமைச்சர்களை சந்தித்து பேச மத்திய அமைச்சர் ஷெகாவத் திட்டம்

14 July 2021, 12:49 pm
megatadu - gajendhira singh - updatenews360
Quick Share

சென்னை : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகம், கர்நாடகா உள்பட 4 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் திட்டமிட்டுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை இரு மாநில நிர்வாகிகளும் சந்தித்து முறையிட்டு விட்டனர். இதனால், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கப்போகிறது என்பது இரு மாநில மக்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் எந்த மாநிலமும் பாதிக்காத வகையில், கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் முடிவு செய்துள்ளார். மேலும், இந்த ஆலோசனையின் அடிப்படையில் மேகதாது அணை விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Views: - 132

0

0