‘கழுத்தை அறுத்து போட்டுருவோம்… ஜாக்கிரதை’ : மிரட்டிய அமைச்சர்… திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி!!

Author: Babu
30 July 2021, 3:43 pm
dmk minister speech - updatenews360
Quick Share

காஞ்சிபுரத்தில் நடந்த திமுக கூட்டத்தில் கழுத்தை அறுத்து போட்டுருவோம் என ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மிரட்டி பேசியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 28ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற திமுகவின் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது :- இந்தக்கூட்டம் மிக முக்கியமானது. தற்போது நமது ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த தொகுதியில் நமக்கு எம்.எல்.ஏ., இல்லை. எனவே, வரும் உள்ளாட்சி தேர்தலில் நம் பிரதிநிதகளை வெற்றி பெறச் செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய உள்ளாட்சி பிரதிநிதி நமது ஆட்களாக இருக்க வேண்டும். அதேவேளையில், அதிமுகவினர் எந்தப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது என்று தலைவரிடம் சொல்லி விட்டோம்.

செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் கட்டாயம் நடக்கும். இந்தத் தேர்தலில் தலைமை பார்த்து யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும், அவர் வெற்றி பெற நாம் உழைக்க வேண்டும். துரோகம் செய்யக்கூடாது. ஒருவேளை இத்தேர்தலில் வெற்றிபெறாமல் போனால் ஒன்றிய செயலாளர்கள் கழுத்தை அறுத்து போட்டுருவோம். ஜாக்கிரதை, எனக் கூறினார்.

அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைச்சர்கள், கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளைப் போன்று அரசியல் நாகரீகமற்று பேசலாமா..? என்ற கேள்வி எழுந்து வருகிறது. அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 187

0

0