விவசாயியை ‘போய்யா’ என திட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்: வயலில் இறங்கி ஆய்வு செய்ய சொன்னது ஒரு குத்தமா…விளாசும் நெட்டிசன்கள்..!!(வீடியோ)

Author: Aarthi Sivakumar
25 November 2021, 10:54 am
Quick Share

திருச்சி: வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த போது, விவசாயி ஒருவரை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரியாதை குறைவாக பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்குளம் பகுதியில் வயல்வெளிகளில் தொடர் மழையின் காரணமாக சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்று அந்தப் பகுதியை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு வெள்ள நீர் வடிவதற்கு உடனடியாக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து ஆவண செய்வதாக விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

அப்போது, வெள்ளம் சூழ்ந்த வயல்வெளியை ஆய்வு செய்த போது, விவசாயி ஒருவர் ‘வெள்ள பாதிப்புகளை வயலில் இறங்கி பார்க்க வேண்டும்’ எனக் கூறினார்.

ஆத்திரம் அடைந்த அமைச்சர் மகேஷ், அந்த விவசாயியை ஏய்…போய்யா என திட்டினார். அதைக் கேட்ட விவசாயி, ‘நானும் விவசாயி தான்’ எனக் கூற அமைச்சர் அன்பில் மகேஷ் விவசாயியை பார்த்து முறைத்தார்.

விவசாயியை அமைச்சர் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 225

0

0