நல்ல வருமானம் வரும்… யாருகிட்டயும் கேட்க வேணாம்… நிலத்தை நம்மளே பிடுங்கிக்கலாம் ; அமைச்சர் ஐ.பெரியசாமி சர்ச்சை பேச்சு!!

Author: Babu Lakshmanan
3 September 2022, 2:29 pm
Quick Share

திண்டுக்கல்லில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நிலத்தை யாரிடமும் கேட்காமல் பிடுங்கி கொள்ளலாம் என்று பகிரங்கமாக கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நகராட்சி திட்டப்பணிகள் ஆலோசனைக் கூட்டம் நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டனர். இதில், பேரூராட்சி தலைவர்கள் நகராட்சி தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாநகராட்சிக்கு சொந்தமாக 15 ஏக்கர் இடம் உள்ளது. அதற்கு கூடுதலாக இடம் வேண்டும் என்றால், அருகில் இருப்பவர்களின் இடத்தை எடுத்துக்கொண்டு, நஷ்டஈடு வழங்காமல் பேருந்து நிலையத்தை ஆரம்பித்து விடலாம் என்று கூறியது அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அரசு நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சரே நிலத்தை புடுங்கிக் கொள்ளலாம் என்று அதிகார தோரணையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மூன்று அமைச்சர்கள் கலந்து கொண்ட வளர்ச்சி திட்டப் பணிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் செல்பி எடுத்துக் கொண்டதும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

Views: - 572

0

0