பிக்பாஸ் போல கொரோனாவுக்கு பயந்து வீட்டிற்குள்ளே இருந்த கமல் : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!

16 September 2020, 2:15 pm
Jayakumar 02 updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தொற்றுக்கு பயந்து பிக்பாஸ் போல 100 நாட்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

ராமசாமி படையாட்சியாரின் 103வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டி அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நடிகர் கமல்ஹாசனின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளித்ததாவது :- தமிழகத்தில் தொற்று பரவ ஆரம்பித்து சுமார் 150 நாட்களாகி விட்டன. பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் உள்ளே இருப்பவர்களுக்கு பரிசுப் பணம் வழங்கப்படும். 150 நாட்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்காக களப்பணியாற்றுகிறோம். ஆனால், அவரோ வெளியே கூட வரவில்லை. பிக்பாஸ் போல வீட்டில் இருந்தபடி, கமல்ஹாசன் அரசை விமர்சனம் செய்து வருகிறார்.

17 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக, கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வராமல் துரோகம் இழைத்துவிட்டது, எனவும் கூறினார்.

Views: - 0

0

0