சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து..!!

Author: Aarthi
11 October 2020, 3:38 pm
tweet - updatenews360
Quick Share

‘உரிமையை பெறு…முன்னே செல்…முன்னெடுத்துச் செல்..’ என சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் சர்வதேச பெண் குழந்தைகளை தினத்தை ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது.

இதன்படி, கடந்த 2012ம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தனது பேத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, உரிமையை பெறு! உரக்க பேசு! உயர்ந்து நில்! உயர செல்! உலகம் உனது! எதற்கும் தயங்காதே! முன்னே செல்! முன்னெடுத்து செல்! அனைவருக்கும் சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Views: - 85

0

0