2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் – அமைச்சர் திட்டவட்டம்!!

Author: Aarthi
6 October 2020, 3:56 pm
jayakumar- updatenews360
Quick Share

தமிழகத்தில் 2021ம் ஆண்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்த முடிவு செய்ய கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே எல்லோரது விருப்பம், இதுவே அனைவரின் ஒருமித்த கருத்து. விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Views: - 51

0

0