இந்தியாவில் இன்னும் விற்பனைக்கே வராத சொகுசு காரை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி கார்களில் ஒன்று டொயோட்டா நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடலான லேங்ணட் க்ரூஸர். இந்தக் கார், பிரதமர் மோடி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் விருப்பமான காராகும்.
கரடு முரடான சாலைகள் மட்டுமல்லாது, முள் நிறைந்த பகுதிகள், மணல் நிறைந்த பாலை வனங்கள் என எந்த பாதையிலும் தடையின்றி பயணிக்கக் கூடிய திறனை கொண்டதுதான் இந்தக் காரின் சிறப்பம்சாகும். பல்வேறு அம்சங்களும் அதிக சொகுசு மற்றும் அதி நவீன் தொழில் நுட்ப வசதிகளை கொண்ட இந்த காரின் மைலேஜ் ஒரு லிட்டர் டீசலுக்கு வெறும் 4 கிலோ மீட்டர் மட்டுமே.
தற்போது லேண்ட் க்ரூஸர் எஸ்.சி.300 மாடலை சஹாரா வெர்ஷனில் விரைவில் இந்தியாவில் களமிறக்க உள்ளது டொயோட்டா நிறுவனம். செமி கண்டக்டர் தயாரிப்பில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, லேண்ட் க்ரூஸர் எஸ்.சி.300 மாடலை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கொண்டு வர டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
இந்தக் காரின் விலை ரூ.2 ஆகும். அதுவும் பணத்தை கட்டினாலும் உடனேவும் டெலிவரி கிடைக்காது. லேண்ட் க்ரூஸர் காரை புக் செய்தால், டெலிவரி செய்ய 6 மாத கால அவகாசமாகும். ஆனால், தற்போது, காத்திருப்பு காலத்தை உயர்த்தி 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. லேண்ட் க்ரூஸர் எஸ்.சி.300 காரை இந்தியாவில் விற்பனை கொண்டு வர இருப்பதாக இன்னும் அறிவிப்பை கூட வெளியிடாமல் இருக்கிறது.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்தக் காரைத்தான் அமைச்சர் கே.என். நேரு வாங்கி கெத்தா வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக, வெளிநாடுகளிலேயே முழுவதும் கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி அதிகமாகும். அதாவது, ரூ.2 கோடி காரின் விலை என்றால், அதே விலை வரியாக கட்ட வேண்டும். அதுமட்டுமில்லாமல், சாலை வரி, காப்பீடு என அதற்கு தனிசெலவு வேறு உண்டு.
மற்றொன்று, காரின் உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரி குறைவு என்பதால், பெரும்பாலானோர், உதிரிபாகங்களை இறக்குமதி செய்துவிட்டு, இந்தியாவில் கட்டமைப்பதைத் தான் செய்வார்கள்.
ஆனால், எல்லோருக்கும் முன்பாக நாம் அந்த காரை பயன்படுத்தி விட வேண்டும் என்று விரும்பும் பல பிரபலங்கள், பல கோடிகளை செலவு செய்வது வழக்கம். இதுபோன்று தான் அமைச்சர் நேருவும், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்.சி.300 மாடல் காரின் மீது அதிக ஆர்வம் கொண்டு, பல கோடிகளை செலவு செய்து வெளிநாட்டில் இருந்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.