புதிய கல்விக் கொள்கை…! நாளை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தும் கே.பி. அன்பழகன்

2 August 2020, 10:07 am
Quick Share

சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து அமைச்சர் கே.பி. அன்பழகன் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்

மத்திய அரசானது சில நாட்களுக்கு முன்பு புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கை குறித்து நாடும் முழுவதும் விவாதங்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.

சாதக, பாதகங்கள் குறித்து, கல்வியாளர்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர். புதிய கல்விக்கொள்கை நடைமுறைக்கு வந்தால், அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளாக மாறும், ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இந் நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.  புதிய கல்விக்கொள்கையில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து  ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. உயர்கல்வித்துறை செயலர்,  அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.

Views: - 0

0

0