கொரோனா பரவல் எதிரொலி.. தமிழகத்தில் பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Author: Babu Lakshmanan
13 July 2022, 2:28 pm
Quick Share

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா..? என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் HMC மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பால்வளதுறை அமைச்சர் சாமு நாசர், சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

பின்னர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் உலக அளவிலான திட்டமாக பாராட்டப்படுகிறது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 91 ஆயிரத்து 86 பேர் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அரசு உதவி இருக்கிறது. காப்பீடு திட்டத்தின்படிசுமார் 82 கோடி 37 லட்சம் விடுவிக்கப்பட்டது.

கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதியாகும். அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, 500 கலைஞர் உணவகம் விரைவில் தமிழகத்தில் ஏற்படுத்தப்படும்.

பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் அவசியமில்லை. தற்போது 40 சதவீதம் மருத்துவமனையில் கொரானோ நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படும். தமிழகத்தில் 2000 முதல் 2500 பாதிப்புகள் உள்ளது.

BA4 BA5 உருமாற்றம் அடைந்த வைரஸ் உலகில் 110 நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு வருகிறது. வேகமாக பரவும் தன்மையுடையது என்பதால் தடுப்பூசி போடும் பணி மக்கள் இயக்கமாக மாறி உள்ளது. ஒரே நாளில் 17 லட்சத்தி 55 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. சரியாக கொரோனா விதிகளை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது, என அவர் தெரிவித்தார்.

Views: - 633

0

0