தமிழகத்தில் புதிய வகை தொற்று பரவல் இல்லை என தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது :- தமிழகத்தில் புதிய வகை ஓமிக்கிரான் 4 என்பது செங்கல்பட்டில் ஒருவருக்கு கண்டறியப்பட்டு, தற்போது நலமாக உள்ளார். தமிழகத்தில் எங்காவது எழுந்தால் அங்கே மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணுத் தொகுப்பை ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்யப்பட்டு, அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்று பற்றி அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் தொற்று இல்லை. கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக இறப்பு ஏதும் இல்லை.
தமிழகத்தில் மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளோம். மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக 4000 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற நியமனம் செய்யப்பட்ட 4442 செவிலியர்கள், 2,247 சுகாதார பணியாளர்கள் என 7696 பேருக்கு தற்போது ஊதியம் உயர்த்தி வழங்கபட்டுள்ளது.
தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பது குறித்து அலுவலர் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 50 கீழே தான் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மத்திய அரசு, குறைப்பது மாநில அரசுகளா..? என பிற மாநிலங்கள் கேள்வி எழுப்பியுள்ளதையும், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மனதில் கொள்ள வேண்டும்.
பிஏ நான்குவகை ஓமிக்கிரான் தொட்டு செங்கல்பட்டில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.