எல்லா கணக்கும் சரியா இருக்கு…No Problem : முன்னாள் அமைச்சர் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து வழக்கறிஞர் விளக்கம்..!!

22 July 2021, 1:32 pm
Quick Share

கரூர் : முறையான கணக்கு வைத்திருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையினால் எந்த பிரச்சனையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் வழக்கறிஞர்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் வீடு உள்பட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்து வருவதால் போலீசாரும் சம்பந்தப்பட்ட இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது தொடர்பாக அவரது வழக்கறிஞர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது :- எம்ஆர் விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் சொத்து வருவாய் ஆதாரங்களை கேட்டறிந்தனர். இந்த சோதனை எதற்காக நடக்கிறது என்பதும் அனைவருக்கும் தெரியும். முறையான கணக்கு வைத்திருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையினால் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களின் பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர், என தெரிவித்துள்ளார்.

Views: - 162

0

0

Leave a Reply