நில ஆக்கிரமிப்புக்கு உதாரணமே கோவைதான்… பேசினால் அரசியலாகிடும் : நழுவும் நிதியமைச்சர் பிடிஆர்..!!
Author: Babu Lakshmanan18 August 2021, 6:02 pm
சென்னை : நில ஆக்கிரமிப்பிற்கு உதாரணமே கோவை மாவட்டம்தான் என்றும், அதனை பற்றி பேசினால் அரசியலாகி விடும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று கூடியதும், கோடநாடு வழக்கில் அதிமுக நிர்வாகிகளின் பெயர்களை சேர்க்க சதி நடப்பதாகக் கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது. அப்போது, சட்டப்படியே விசாரணை நடப்பதாகவும், இந்த வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும் என்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என உறுதியளித்தார்.
பின்னர், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் குறித்து விளக்கமளித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் வனத்துறை ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்தும் பேசினார்.
அவர் பேசியதாவது :- தமிழகத்தில் வனத்துறை ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. வனத்துறை கோவையில் ஆக்கிரமிப்புக்கு மிகப்பெரிய உதாரணமாக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஆக்கிரமிப்புகள் நடந்தாலும், கோவைதான் ஆக்கிரமிப்பில் பெரிய உதாரணமாக நிற்கிறது. அந்த உதாரணம் பற்றி நான் பேசினால் அரசியல் ஆகிவிடும். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, எனக் கூறினார்.
0
0