தமிழக உயர்கல்வித்துறையின் அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமாக இருப்பவர் பொன்முடி. சென்னைசைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிலும், விழுப்புரத்தில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை குறித்த தகவல் அறிந்து வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்து வருவதால், சோதனை நடக்கும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படையின் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை, விழுப்புரம் என அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத்தூறை சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த ஜுன் மாதம் 13ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில், திமுக அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனைக்கான காரணம் என்ன என்று விவரம் வெளியிடப்படவில்லை. என்ன வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரியாத நிலையில், அண்மையில் தான் இரண்டு முக்கிய வழக்குகளில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.
1996ம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போலி ஆவணங்களை தயார் செய்து தனது மாமியார் பெயரில் நிலத்தை அபகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில், அரசுக்குச் சொந்த 3,630 சதுர அடி நிலத்தை மாமியார் பெயரில் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.
அதேபோல், 1996-2002 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கிலும் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்டவில்லை என்று பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே, அமைச்சர் பொன்முடிக்கு எதிராக 2012ம் ஆண்டு தொடரப்பட்ட செம்மண் குவாரி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.