எடப்பாடி பழனிசாமியே அ.தி.மு.க. வேட்பாளர் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு..!

11 August 2020, 11:17 am
MInister Rajendra Balaji Byte- updatenews360
Quick Share

சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர் வேட்பாளர் என்றும் அமைச்சர் ராஜேந்திரல பாலாஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு மத்தியிலும் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. வெளியே ஏதும் நடக்கவில்லை, கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளைப் பற்றி தான் கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்துவதாக, அரசியல் தலைவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறிக் கொண்டாலும், அது அத்துனையும் தேர்தல் பற்றிய நகர்த்தல்களாகவே இருந்து வருகின்றன.

மதுரை மாவட்டம் பரவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. அதிமுகவின் நல்லாட்சியை மக்கள் என்றும் ஆதரிப்பார்கள். அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரின் இரட்டைத் தலைமை முறை தொடரும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பர், ” எனக் கூறியிருந்தார். அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்தப் பேச்சு அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான், இதில் எந்தவித சந்தேகமும் இல்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், “எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு
களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் கான்போம்!வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே!,” எனத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

Views: - 10

0

0