கொரோனா தடுப்பூசி போட்டீங்களா… அத முதல்ல பண்ணுங்க : ராகுல் காந்திக்கு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பளார்..!!

21 June 2021, 8:03 pm
rahul - ravi shankar prasad - updatenews360
Quick Share

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, இன்று முதல் மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. அதேவேளையில், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை மற்றும் கொரோனாவை கையாளுவதை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாள்தோறும் விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது :- ராகுல் காந்தி தடுப்பூசி போட்டுக் கொண்டாரா..? இல்லையா..? என்பது கூட தெரியவில்லை. ஒருவேளை இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனில், உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள், என தெரிவித்துள்ளார்.

Views: - 150

0

0