7 பேர் விடுதலையில் சட்ட சிக்கலை உருவாக்க முயற்சி : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்

5 July 2021, 6:44 pm
minster regupathi - updatenews360

Shri S. Regupathy assumes the charge of Minister of State for Home affairs in New Delhi on May 26, 2004 (Wednesday).

Quick Share

ஏழு தமிழர்கள் விடுதலையில் சட்ட சிக்கலை உருவாக்க முயற்சி செய்வதாகவும், முதலமைச்சர் இதில் எந்த சிக்கலிலும் சிக்கிக் கொள்ள மாட்டார் என மதுரையில் சட்டத்துறைஅமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மதுரை அரசரடி பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி, கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது :- 1562 கைதிகள் மதுரை மத்திய சிறையில் உள்ளனர். கைதிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தேன். சில அடிப்படை வசதிகள் செய்து தரும்படி கேட்டு உள்ளனர். அதிமுக ஆட்சியில் கைதிகளின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. முதலமைச்சர் கைதிகளின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறார். சிறையில் கூடுதலாக மருத்துவ வசதிகளை அதிகரிக்க உள்ளோம்.

விடுதலை கோரும் கைதிகளை விடுவிக்க பரிசீலனை செய்யப்படும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் உள்ள ரவிசந்திரன் பரோல் கேட்டு உள்ளார். நேரடியாக பரோல் கேட்க முடியாது என்பதால் ரவிசந்திரன் தாயார் வழியாக பரோல் கேட்க அறிவுறுத்தி உள்ளேன். ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார். ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும் ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்கவில்லை. ஏழு தமிழர் விடுதலையில் சட்ட சிக்கலை உருவாக்க முயற்சி நடக்கிறது. முதலமைச்சர் இதில் எந்த சிக்கலிலும் சிக்கிக் கொள்ள மாட்டார், என தெரிவித்துள்ளார்.

நீட் ஆய்வுக்குழு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற தெரிவித்த கருத்துக்கு குறித்து கேட்ட போது, “ஆய்வு குழு மக்களின் கருத்துக்களை பெறவே நியமிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றங்களுக்கு எதிராக அந்த குழு உருவாக்கப்படவில்லை. சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே நியமிக்கப்பட்டு உள்ளது,” என கூறினார்.

Views: - 153

0

0