அமைச்சர் சேகர்பாபு சகோதரர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை… காரணம் கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சரின் குடும்பம்…!!

Author: Babu Lakshmanan
27 September 2022, 9:36 am
Quick Share

சென்னை : அமைச்சர் சேகர்பாபுவின் மூத்த சகோதரர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. இவருக்கு தேவராஜ் என்னும் மூத்த சகோதரர் இருந்து வந்தார். இவர், நேற்று தனது சொந்த வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அவரது உடல் உடலை மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட தேவராஜின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.

இதனிடையே, அமைச்சரின் சகோதரர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன..? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கடும் வயிற்று வலியால் தொடர்ந்து அவதிபட்டு வந்த தேவராஜ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு, இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். அமைச்சர் சேகர் பாபுவின் அண்ணன் தற்கொலை செய்தியை அறிந்த தொண்டர்கள் அவரது வீடு முன்பு குவிந்து வருகின்றனர்.

Views: - 347

1

0