பள்ளிக்கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள்…! அமைச்சர் கடும் எச்சரிக்கை

3 August 2020, 12:33 pm
Erode sengottayan - Updatenews360
Quick Share

சென்னை: மாணவர்களிடம் முழுமையான கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

கொரோனா தாக்கத்தால் தமிழகம் முற்றாக முடங்கி போயிருக்கிறது. கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் மார்ச் முதல் மூடப்பட்டு தான் உள்ளன. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் கல்வியாக மாறி உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7ம் கட்ட ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் மாணவர்களின் கல்வி தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் ஆன் லைன் வழி கல்வி முறை வேகம் எடுத்துள்ளது.

இப்படி ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுகின்றன. அதாவது ஆன் லைன் வழியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந் நிலையில் தனியார் பள்ளிகள் குறைந்தபட்ச கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். முழுக் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Views: - 1

0

0