பள்ளி மாணவர் சேர்க்கை..! வரும் 10ம் தேதி அறிவிக்கப்படும்..! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

7 August 2020, 1:11 pm
Quick Share

சென்னை: பள்ளி மாணவர் சேர்க்கை அறிவிப்பை முதலமைச்சர் வரும் 10ம் தேதி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

கொரோனா தொற்று தமிழகத்தை ஆட்டி படைத்து வருகிறது. அதன் காரணமாக மார்ச் முதல் மூடப்பட்ட கல்வி நிலையங்கள் இப்போது வரை திறக்கப்படவில்லை.

கோடை விடுமுறை முடிந்துவிட்டது. குறிப்பாக பள்ளிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. எப்போது திறக்கப்படும் என்றும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அது போல மாணவர் சேர்க்கை  குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை. ஆனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி நடத்தி வருகின்றன.

அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை கற்பித்து வருகிறது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகாததால் பெற்றோர்கள் குழம்பி போய் உள்ளனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வரும் 10ம் தேதி அறிவிப்பார், கொரோனா தொற்றுகள் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.