அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா?: விளக்கம் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்…!!

28 November 2020, 11:22 am
minister senkottaiyan - updatenews360
Quick Share

சென்னை: அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால் நாடு முழுவதும் பள்ளி-கல்லூரிகளை மூட கடந்த மார்ச் 16ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால், இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

இதனைதொடர்ந்து, புதிய கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. கடந்த ஜூன் 8ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாளை மறுநாள் அறிக்கை வழங்கப்படும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தந்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது. அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறுவது மக்கள் கையில்தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Views: - 21

0

0