முன்கூட்டியே அண்ணாமலை விவரங்களை வெளியிட்டது எப்படி..? அவரைத்தான் என்ஐஏ முதலில் விசாரிக்கனும்… அமைச்சர் செந்தில்பாலாஜி..!!

Author: Babu Lakshmanan
27 October 2022, 1:17 pm
annamalai - senthil balaji - updatenews360
Quick Share

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 23ம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், வெடித்து சிதறிய காரிலும், உயிரிழந்த நபரின் வீட்டிலும் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சதிச் செயலை அரங்கேற்ற திட்டம் தீட்டப்பட்டதா..? என்ற கோணத்தில் விசாரித்து வரும் போலீசார், இதுவரையில் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்ட காவல் ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், கோவையின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பேது, அவர் பேசியதாவது :- 12 மணி நேரத்தில் இறந்தவர் பெயர் விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர். முதல்வர் தொடர்ந்து விசாரணையை கண்காணித்து வருகிறார். 2019 பிறகு 8 உரிமையாளர்கள் மாறினர்.

தீபாவளியை பொதுமக்கள் எந்த பாதிப்பும் அச்சமும் இல்லாமல் தீபாவளியை கொண்டாடினர். காவல் துறை விரைந்து செயல்பட்டுள்ளது. ஆனால் சிலரால் கோவை பதட்டமாக உள்ளது போல் காட்டப்பட்டு வருகிறது. யார் தவறு செய்தார்களோ, அவர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேறு மாநிலத்தின் தொடர்புகள் இருப்பதால் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படுகிறது. யாரோ சொல்லி இதை செய்யவில்லை. விசாரணை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முதல்வர் கோவைக்கு அதிக கவனம் செலுத்துகிறார். அரசியல் நோக்கத்தோடு சிலர் பதட்டம் ஏற்படுத்துகின்றனர். பாஜக பந்த் குறித்து அரசியலாக்க முயற்சி செய்வதாக செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

தேசிய புலனாய்வு முகமை முதலில் பாஜக தலைவரை விசாரிக்க வேண்டும். குற்றவாளிகள் யார் என்பதை தீர்மானித்த பின்பு போலீசார் செய்தி வெளியிடுகின்றனர். ஆனால் காவல்துறைக்கு முன்பே பாஜக தலைவர் தகவல் வெளியிடுகிறார் என்றால் குறுகிய நோக்கம் தெரிகிறது. ஆகவே முதலில் அவரின் தகவல் குறித்து தேசிய முகமை விசாரிக்க வேண்டும்.

3 ஆயிரம் காவலர்கள் 40 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பந்த் தேவையற்றது அது அரசியல். சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்.

தமிழலை காப்பாற்றுகிறேன் என்றார்கள், பின்னர் விநாயகரை காப்பாற்றுகிறேன் என்றார்கள். தற்போது இதை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள். ஜிஎஸ்டி, நூல் விலை போன்ற எவ்வளவு பாதிப்புகள் இருந்தது அப்போது எங்கே சென்றார்கள். மாநிலம் கடந்த விசாரணை தேவை என்பதால் தேசிய புலனாய்வு முகமைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத தாக்குதலின் போது எத்தனை அமைச்சர்கள், பிரதமர் ஆகியோர் ஊடகங்களை சந்தித்து பேசினார். முதல்வர் நடவடிக்கைகள் விசாரணைகள் அனைத்தும் முடிந்த பின்பு தான் கருத்து தெரிவிப்பார். நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. மட்ட ரகமான அரசியல் பாஜக. நன்மை செய்து அரசியல் செய்யட்டும்.

தீபாவளியன்று பொது மக்களுக்கு எந்த பாதிப்பாவது இருந்ததா..? முதல்வரின் உத்தரவின் பேரில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டது. முப்படை தளபதி இறந்த பொழுது பாஜகவினர் எட்டி கூட பார்க்கவில்லை. கடையடைப்பு தொடர்பாக வணிக நிறுவனங்கள் பொதுமக்களை அச்சுறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என கூறினார்.

Views: - 311

0

0