கொரோனா தடுப்பூசி : ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.,யுடன் இணைந்து செயல்படும் தமிழக சுகாதாரத்துறை : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்..!

26 August 2020, 4:25 pm
vijayabaskar - updatenews360
Quick Share

சென்னை : ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ள “கோவிட் ஷீல்டு” தடுப்பு மருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மனிதர்களுக்கு பரிசோதிக்கும் முயற்சிகள் துவங்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனோ பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கும் நடைமுறை மற்றும் எம்.ஆர்.எப் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி கார்களை பயன்பாட்டிற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கொரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் குறுஞ்செய்தி மூலம் அவரவர் அலைபேசிகளுக்கு வருமாறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆர்.டி.பி.சி மூலம் பரிசோதனைகள் செய்வதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இதுவரை 18 ஆயிரம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகள் இறப்புகளை குறைப்பதற்கு தகுந்த வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள “கோவிட் ஷீல்டு” என்ற தடுப்பு மருந்து சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் முதல்கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதிக்கும் முயற்சிகள் துவங்கப்படவுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்க உள்ள நிலையில் தேவைப்பட்டால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் வசந்தகுமார் எம்.பி மற்றும் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் ஆகியவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, எனக் கூறினார்.

Views: - 90

0

0