நிவாரணத் தொகையில் தவறான தகவல்… மத்திய அரசு நிதி மட்டுமே இருக்கு.. தமிழக அரசின் பங்கு எங்கே? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

நிவாரணத் தொகையில் தவறான தகவல்… மத்திய அரசு நிதி மட்டுமே இருக்கு.. தமிழக அரசின் பங்கு எங்கே? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார், மேலும் புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ.5,000-ஐ, ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 லிருந்து, ரூ.17,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18,000-லிருந்து, ரூ.22,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7.410 லிருந்து, ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
எருது. பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000 லிருந்து ரூ.37,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000 லிருந்து ரூ.4,000 உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது X தளப்பக்கத்தில் விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், வெறும் 6,000 ரூபாய் மட்டுமே நிவாரண நிதியாக அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை நிதியாக, தமிழக அரசுக்கு ரூபாய் 450 கோடி வீதம் இரண்டு தவணைகளில், ரூபாய் 900 கோடி நிதி வழங்கியுள்ளது.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி, மத்திய அரசு வழங்கியுள்ள இந்த பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்துதான் வழங்கப்படுகிறது என்ற நிலையில், மாநில அரசின் பங்கு ஒன்றுமில்லாமல், வெறும் ரூபாய் 6,000 மட்டுமே நிவாரண நிதி என்ற அறிவிப்பு பொதுமக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறது.

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி அன்று, மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், பேரிடர் நிவாரண நிதியாக பொதுமக்களுக்கு, உடைகள் இழப்பீடாக ஒரு குடும்பத்துக்கு ரூ. 2,500 மற்றும் உடமைகள் இழப்பீடாக ரூ. 2,500 மற்றும் ஒரு வாரத்துக்குக் குறைவான மருத்துவமனையில் தங்கி பெறும் சிகிச்சைக்கு ரூ. 5,400 வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. தமிழக பாஜக, இதன் அடிப்படையில்தான் ரூ. 10,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது.

மேலும், மத்திய அரசின் அதே சுற்றறிக்கையில், நெற்பயிர் உள்ளிட்ட பயிர்வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 17,000 எனவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்களுக்கு, ஹெக்டேருக்கு ரூ. 22,500 எனவும், மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 8,500 எனவும், சேதமடைந்த குடிசை வீடுகளுக்கான இழப்பீடு ரூ. 8,000 ஆகவும், எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் இழப்பீடு ரூ. 37,500 எனவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு ரூ. 4,000 எனவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து மாநிலங்களும், பேரிடர் காலங்களில், இழப்பீடாக இந்தத் தொகையையே மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், திமுக அரசு, தாங்கள் ஏதோ நிவாரண நிதியை தற்போது உயர்த்தியிருப்பது போல, தவறான தகவல் அளித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ள பேரிடர் மேலாண்மை நிதியை மட்டுமே பொதுமக்களுக்கு நிவாரணமாக அறிவித்திருக்கிறாரே தவிர, மாநில அரசின் பங்கு என்று எதுவுமே இல்லை.

எனவே, அறிவித்துள்ள ரூ.6,000 நிவாரண நிதியை, ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், வழக்கம்போல, திமுக கட்சியினர் தலையீடு இல்லாமல், டோக்கன் வாங்க வேண்டும் என்று பொதுமக்களை திமுக நிர்வாகிகள் வீட்டுக்கு அலைக்கழிக்காமல், முறையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறோம் என பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

15 minutes ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

2 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

2 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

3 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

3 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

4 hours ago

This website uses cookies.