‘மண்ட மேல இருக்கற கொண்டய மறந்துட்டீங்களே’ : பீகாரில் டிரெண்டாக்கப்பட்ட #TNwithMKStalin.. அதிருப்தியில் ஸ்டாலின்..!

30 October 2020, 8:09 pm
bihar trending - updatenews360
Quick Share

113வது தேவர் ஜெயந்தி நாளை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கடந்த ஆண்டு இதே தேவர் ஜெயந்தியன்று ஸ்டாலின் செய்த சில செயல்களும், ஸ்ரீரங்கத்தில் நிகழ்ந்த செயல்களையும் ஒன்றிணைத்த புகைப்படங்களை, திமுகவிற்கு எதிரான கட்சிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றன.

நாத்திகவாதக் கொள்கையை கொண்ட அரசியல் தலைவருக்கு பசும்பொன்னில் என்ன வேலை..? என்ற கேள்வியை எழுப்பும் விதமாக, டுவிட்டரில் GoBackStalin என்னும் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. கோவில்களில் வைக்கப்பட்ட திருநீறை அழிக்கும் ஸ்டாலின் தேவர் திருமகனார் பூமியில் என்ன செய்வார்? ஆன்மிக பூமியில் நாத்திகவாதிகள், இந்துக்களை அவதூறாக பேசுபவர்களுக்கு என்ன வேலை? எனும் கருத்துக்களும் ட்விட்டரில் பரவி வருகிறது.

gobackstalin - updatenews360

இந்த நிலையில், GoBackStalin என்னும் ஹேஸ்டேக்கிற்கு பதிலடி கொடுக்கும் விதமான வேலைகளை, திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான குழுவினர் இறங்கி செய்து வந்தனர். #TNwithMKStalin என்னும் ஹேஸ்டேக்கை டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர். திமுகவினரும் இதனை டிரெண்ட் முயன்ற போது, அப்படி எந்தவொரு ஹேஸ்டேக்கும் தென்படாததை கண்டு குழப்பமடைந்தனர். தமிழகம் மற்றும் தேசிய அளவிலும் தேடிப்பார்த்த போது, அது போன்ற எதுவும் டிரெண்டாகவில்லை.

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோரின் சொந்த ஊரான பீகாரில் #TNwithMKStalin என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வந்தது தெரிய வந்தது. பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில், தமிழகத்தில் டிரெண்ட் செய்ய வேண்டிய ஹேஸ்டேக்கை மறந்து பீகாரில் டிரெண்ட் செய்துள்ளனர் பி.கே. குழுவினர். இந்த ஹேஸ்டேக்குகளை தமிழே தெரியாத பீகாரிகள் டிரெண்ட் செய்து வருவதுதான் சிறப்பம்சமாக இருந்துள்ளது.

stalin-prasanth-kishore-updatenews360

‘மண்ட மேல இருக்கற கொண்டய மறந்துட்டீங்களே பாஸ்’ என நெட்டிசன்கள் திமுகவினரை கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் செயல்பாடுகள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திருப்தியளிக்காத நிலையில், தற்போது நடந்துள்ள சம்பவம் அவருக்கு கோபத்தையே ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

1 thought on “‘மண்ட மேல இருக்கற கொண்டய மறந்துட்டீங்களே’ : பீகாரில் டிரெண்டாக்கப்பட்ட #TNwithMKStalin.. அதிருப்தியில் ஸ்டாலின்..!

Comments are closed.