ஹத்ராஸ் சம்பவத்திற்காக போராட்டம் நடத்திய கனிமொழி.. பூங்கோதைக்காக வாய்திறக்காதது ஏன்..? பாஜக கேள்வி (வீடியோ)

20 November 2020, 7:36 pm
poongothai - kanimozhi - updatenews360
Quick Share

சென்னை : சொந்த கட்சியினரால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்ட திமுக எம்எல்ஏ பூங்கோதை விவகாரத்தில், அக்கட்சியின் எம்பி கனிமொழி வாய்திறக்காமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா. இவர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்து வந்த இவர் கனிமொழிக்கு மிகவும் நெருக்கமானவராவர். தென்காசி கடயம் பகுதி திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி, உதயநிதி ஆதரவாளர்களால் எழுந்த கோஷ்டி பூசலினால் பொது இடத்தில் அவமதிக்கப்பட்டார்.

பூங்கோதையிடம் இருந்த மைக்கை பிடுங்கிய நிர்வாகிகள் அவரை கேலி செய்து சிரித்து அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சொந்த கட்சிக்காரர்களே இப்படி நடந்து கொண்டதால் ஏற்பட்ட மனவிரக்தியில் அவர் அதிகளவிலான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் திமுகவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

L Murugan - Updatenews360

இந்த நிலையில், ஹத்ராஸ் சம்பத்திற்காக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட கனிமொழி, திமுக எம்எல்ஏ பூங்கோதை விவகாரத்தில் வாய்திறக்காதது ஏன்..? என பாஜக மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் பேசியதாவது :- உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடக்கக் கூடாத சம்பவம் ஒன்று நடந்தது. அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. ஆனால், இன்று திமுக எம்எல்ஏ ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார். அதுவும் சீனியர் தலைவர். அவருக்காக இதுவரை கனிமொழி ஏன் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

உத்தரபிரதேசத்தில் நடந்தால் கூப்பாடு போடுவீங்க, உங்க கட்சியில் நடந்தால் அமுக்கி விடுவீர்களா…? இதுதான் உங்களின் நிலைப்பாடு. சகோதரி பூங்கோதைக்கு ஏற்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

Views: - 22

0

0

1 thought on “ஹத்ராஸ் சம்பவத்திற்காக போராட்டம் நடத்திய கனிமொழி.. பூங்கோதைக்காக வாய்திறக்காதது ஏன்..? பாஜக கேள்வி (வீடியோ)

Comments are closed.