நாட்டையே உலுக்கிய கேரள விமான விபத்து…! கமல்ஹாசன் இரங்கல்

8 August 2020, 12:56 pm
Quick Share

சென்னை: கேரள விமான விபத்தில் பலியானவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

துபாயிலிருந்து 191 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கோழிக்கோடு காரிப்பூர் விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியது. விபத்தில், விமானம் இரண்டாக பிளந்தது. விமானி தீபக் வசந்த் சாதே உள்பட 20 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

விமான நிலையத்தில் பெய்த பலத்த மழையால் கட்டுப்பாட்டை இழந்து, விமானம் சறுக்கியபடியே பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கு ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் விரைவில் மீண்டு வர வாழ்த்துக்கள்.

விபத்தின் போது பலரை காப்பாற்றிய கோழிக்கோட்டில் உள்ள மக்கள்,  விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், மருத்துவ நிபுணர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்கிறேன் என்று கூறி உள்ளார்.

Views: - 10

0

0