கொரோனாவுக்கு எதிராக 100 % பலனளிக்கும் மாடர்னா தடுப்பூசி : சாதித்து காட்டிய அமெரிக்கா!!

30 November 2020, 6:16 pm
moderna - updatenews360
Quick Share

கொரோனாவுக்கு எதிராக 100 சதவீதம் பலன் அளிக்கும் மாடர்னா தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்காவின் எஃப்டிஏ விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் குரல்வலையை பிடித்து மூச்சுத்திணறடித்து வருகிறது கொரோனா. இந்த தொற்றிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு முன்னணி நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசியை உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக அந்நாடு அரசு அங்கீகரித்தாலும், சர்வதேச நாடுகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும், பல்வேறு நாடுகளில் அந்த தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, அமெரிக்காவில் பைசரை தொடர்ந்து மாடர்னா என்னும் தடுப்பூசியும் பரிசோதித்து பார்க்கப்பட்டது. கொரோனாவுக்கு எதிராக இந்த மருந்து 100 சதவீதம் பலன் அளிக்கக் கூடியதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக 100 சதவீதம் பலன் அளிக்கும் மாடர்னா தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்காவின் எஃப்டிஏவிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதிளிக்கப்படும் பட்சத்தில் மனிதர்களுக்கு செலுத்தப்பட இருக்கிறது.

Views: - 27

0

0