இன்று கூடும் மழைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்; மெட்ரோதிட்டம்” வருமான வரி” போன்றவற்றில் வரப்போகும் மாறுதல்கள் என்ன?

வழக்கமாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், மழைக்கால கூட்டத் தொடர், பட்ஜெட் கூட்டத் தொடராக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர், இன்று தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மொத்தம் 19 அமர்வுகளைக் கொண்டிருக்கும், இதில் 90 ஆண்டுகால விமானச் சட்டத்தை மாற்றுவது உட்பட 6 மசோதாக்களை மத்திய அரசு முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்கால கூட்டத் தொடரின் பட்ஜெட் அமர்வில் நீட் தேர்வுத் தாள் கசிவு வழக்கு மற்றும் ரயில்வே பாதுகாப்பு உள்ளிட்டபிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என சொல்லப்படுகிறது

மத்திய அரசு ஆட்சியின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் இந்த அமர்வில் பெறவுள்ளதாக தெரிகிறது.

ஏழாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மதியம் 2:30 மணிக்கு பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும். மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் மொத்தம் ஆறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்.

1 நிதி மசோதா
2 பேரிடர் மேலாண்மை மசோதா: பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் பல்வேறு அமைப்புகளின் செயல்பாடு பற்றி தெளிவு பெற மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த சட்டம்
3 பாரதிய வாயுயான் விதேயக்: 1934 ஆம் ஆண்டின் விமானச் சட்டத்திற்குப் பதிலாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்க முயல்கிறது.
4 கொதிகலன்கள் மசோதா
5 காபி மசோதா(விளம்பரம் மற்றும் மேம்பாடு)
6 ரப்பர் மசோதா(விளம்பரம் மற்றும் மேம்பாடு)

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசின் எதிர்பார்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் 2024-இல் மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான நிதி, தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல், பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு,
கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.